நெல்கட்டுசெவலில் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்கட்டுசெவலில் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் நாற்பத்தி இரண்டாவது (42) ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென் மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் பஞ்சாயத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மு.ராமராஜா அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சங்கர்ஜி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் வேல்ஆறுமுகம் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் முப்புடாதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அந்தோணிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராம்குமார், புளியங்குடி நகர தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி