மாமன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை
மாமன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
சங்கரன்கோவில் அருகே பூலித்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகள் எனஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு நிதித்துறை தங்கம் தென்னரசு, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய வழக்கறிஞர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று முதல்வரின் பிரதிநிதிகளாக வந்துள்ளோம். புலித்தேவரின் புகழ் பல நூறு ஆண்டு காலம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜு, உதயகுமார், கடம்பூர் ராஜு, சி.தா. செல்ல பாண்டியன், சண்முகநாதன், ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu