புளியங்குடியில் தனியார் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

புளியங்குடியில் தனியார் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை கன்சிகா.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்தாள்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புளியங்குடி அருகே ரத்தனபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் [வயது40] - இசக்கியம்மாள் தம்பதிகள் . ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு காவ்யா, . கன்சிகா என்று இரண்டு மகள்கள் உண்டு. இதில் புளியங்குடி அரசு பள்ளியில் காவ்யா, 12 ஆம் வகுப்பும் கன்சிகா ரத்தனபுரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 4 ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். நேற்று மதியம் ராஜேந்திரன் தனது மகள்கள் , உறவினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் அருகிலுள்ள தனியார் நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

குழந்தைகள் ட்யூப் மூலமாக நீச்சல் அடித்து கொண்டு குளித்தவாறு இருந்தனர் இதில் எதிர்பாராதவிதமாக கன்சிகா நீரில் மூழ்கினாள் . உற்சாகமாக குளித்து கொண்டு இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடும் போது குழந்தை நீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை புளியங்குடி தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததையடுத்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .

அதனை தொடர்ந்து புளியங்குடிஇன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோருடன் குளிக்க சென்ற சிறுமி கண் முன்பே நீரில் மூழ்கி பலியான சம்பவம் ரத்தனபுரி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags

Next Story