சங்கரன்கோவில் அருகே செல்போன் கடைகளில் காெள்ளையடித்த 3 பேர் கைது: பாேலீசார் அதிரடி

சங்கரன்கோவில் அருகே செல்போன் கடைகளில் காெள்ளையடித்த 3 பேர் கைது: பாேலீசார் அதிரடி
X

சங்கரன்கோவில் அருகே செல்போன் கடையை உடைத்து பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே செல்போன் கடையை உடைத்து பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு மேல் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் அதன் உதிரி பாகங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மற்றொரு கடையிலும் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து பலனளிக்காமல் சென்றுவிட்டனர்.

சிவகிரி தாலுகா மேட்டுப்பட்டி சேர்ந்த செல்லப்பா மகன் முத்துசாமி (35)என்பவரது செல்போன் கடையில் 10 லட்சம் மதிப்புள்ள செல்போன்களும் ரொக்கப் பணமாக ரூபாய் 11,0000 மும், புளியங்குடி சிதம்பரபேரி ஓடை தெருவைச் சேர்ந்த ரிசல் முகமது மகன் முகமது யூசுப் (44) செல்போன் கடையில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களும் ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப் பணமும், மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு செல்போன் கடையில் பூட்டை உடைத்தும் சென்டர் லாக் போட்டிருந்ததால் கொள்ளை அடிக்க முடியாமல் கொள்ளையர்கள் சென்றுவிட்டனர்.

முத்துச்சாமி மற்றும் ரிசல் முகமது கொடுத்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரிலும் இன்ஸ்பெக்டர் ராஜாராம் அறிவுறுத்தலின் பேரில் புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் விஜய பாண்டியன் சைலஸ் மதியழகன் ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடினர். தேடியதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் துரைப்பாண்டி மகன் கார்த்திக் பாண்டி (20) ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகர் கண்ணன் மகன் சுகுமாரன் (26) மதுரை தெற்கு அரசரடி விராட்டிபத்து மேலத்தெரு சரவணன் மகன் சிவசங்கர் (21) ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்ததை தொடர்ந்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் மதுரையிலிருந்து மினி லாரி மூலம் திருநெல்வேலி, பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளுக்கு சிப்ஸ் இறக்கிவிட்டு கடையநல்லூரில் திருட முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு போலீசார் ரோந்து பணியில் இருந்ததால் புளியங்குடிக்கு வந்தனர். புளியங்குடியில் பூலித்தேவர் பிறந்தநாளில் ஊரடங்கு பணிக்காக போலீசார் சென்றதால் ரோந்து பணி போலீசார் குறைவாக இருந்ததால் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதனால் கொள்ளையர்களை கைது செய்தனர். இதனால் புளியங்குடி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future