சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

சிறுமியை திருமணம் செய்த நபர் கைது
X

புளியங்குடி அருகே 15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை கரிசல்குடியிருப்பைச் சேர்ந்த சிங்கத்துரை (31) என்ற நபருக்கு அவரின் பெற்றோர்,15 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 15 ம் தேதி அன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.பின்னர் சிங்கத்துரையும் அந்த 15 வயது சிறுமியும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அறிந்த வாசுதேவநல்லூர் சமூகநல விரிவாக்க அலுவலர் குருபாக்கியம் புளியங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை மேற்கொண்டு சிங்கத்துரை, அவரின் தந்தை முருகன்,தாய் புதியவள்,சிறுமியின் தந்தை வெங்கையன்,தாய் முத்துலட்சுமி,மற்றும் குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்த உறவினர்கள் நாகமணி,சின்னத்துரை, மாரியம்மாள் ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிங்கத்துரை மற்றும் முத்துலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!