யானை தந்தம் வைத்திருந்த 2 பேர் கைது, 4 பேர் தப்பி ஓட்டம்

யானை தந்தம் வைத்திருந்த 2 பேர் கைது, 4 பேர் தப்பி ஓட்டம்
X

தென்காசி மாவட்டம் சிவகிரியில் யானை தந்தம் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் தப்பியோடி தலைமறைவானார்கள்.

தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டில் யானை தந்தம் இருப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி வனத்துறையினருக்கு ரகசியமாக யானைத்தந்தம் இருப்பது குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.

இதன்படி சிவகிரி வனச்சரக அதிகாரி சுரேஷ் தலைமையிலான படையினர் தீவிரமாக தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தேவிபட்டணம் கிராமத்தில் உள்ள கலைஞர் என்பவருக்கு சொந்தமான வீட்டை ஆய்வு செய்த போது வீட்டினுள் இரண்டு யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் யானைத்தந்தம் எப்படி கிடைத்தது யாரிடம் கிடைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கலைஞர் (43) நடராஜன் (62) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய செந்தூர்பாண்டியன், ராஜேந்திரன், ரூபன், அழகர்சாமி, ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராமத்தில் யானை தந்தம் கண்டு பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா