காணாமல் போன சிறுவன் 1 மணி நேரத்தில் மீட்பு

காணாமல் போன சிறுவன் 1 மணி நேரத்தில் மீட்பு
X

காணாமல் போன சிறுவனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் புளியங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி உறையூரிலிருந்து முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் மகன் முகமது முஷரப் (4) ஆகியோருடன் புளியங்குடி வந்துள்ளார்.

அப்போது திடீரென அவரது மகன் காணாமல் போய்விட்டதாக புளியங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக புளியங்குடி போலீசார் நடவடிக்கை எடுத்து விரைந்து செயல்பட்டு 1 மணி நேரத்திற்குள் சிறுவனை கண்டுபிடித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சிறுவனை விரைவாக கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த புளியங்குடி போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!