தென்காசி மாவட்டத்தில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்.

தென்காசி மாவட்டத்தில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்.
X

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ்

தென்காசி மாவட்டத்தில் நாளை 411 மையங்களில் மூன்றாவது கட்டமாக கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கின்றது

நாளை (26.9.2021) ஞாயிற்றுக்கிழமையன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் என 411 மையங்களில் மூன்றாவது கட்டமாக கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கின்றது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் விடுத்துள்ள செய்தியில்,

முகாமிற்கு வருகின்ற நபர்கள் தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்த வருகின்ற பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்ற வேண்டும்.

முகாம்கள் காலை 7 மணி முதல் நடைபெறும். முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்பினர் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி