செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது
X

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கம்மாள் சாலையில் குலசேகரப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்(18) என்பவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் மகேந்திரனின் சாப்பாட்டு கூடையில் வைத்திருந்த அவரின் செல்போனை திருடி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மகேந்திரன் தென்காசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டு மேற்படி செல்போனை திருடிய சிவகிரியைச் சேர்ந்த மகில் அன்பு என்பவரின் மகன் கணேஷ்குமார்(39) மீது வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!