ஊராட்சி தலைவரான 21 வயது பெண் இன்ஜினியர்
ஊராட்சி தலைவரான பெண் இன்ஜினியர் சாருகலா
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ளது வெங்கடாம்பட்டி ஊராட்சி இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு அங்குள்ள லட்சுமி ஊரை சேர்ந்த ரவி சுப்பிரமணியன் என்பவரின் மகள் இன்ஜினியரான சாருகலா போட்டியிட்டார். பதிவான வாக்குகள் கடந்த 12ஆம் தேதி எண்ணப்பட்டன. இன்ஜினியர் வேட்பாளர் சாருபாலா 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்றார். இளம் வயது பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து இளம் வயது தலைவரான இன்ஜினியர் சாருகலா கூறியதாவது: என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் எனது பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து வளமான கிராமமாக மாற்ற பாடுபடுவேன். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். தமிழக அரசின் திட்டங்கள் எங்கள் பகுதி மக்களுக்கு கிடைக்கச் செய்வேன். கிராமத்தில் அனைத்து பகுதிகளையும் சுகாதாரம் நிறைந்ததாக மாற்றி முன்மாதிரி கிராமமாக வெங்கடாம்பட்டியை மாற்றுவேன். இதற்காக பொதுமக்களின் கருத்தை கேட்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu