கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், அதிமுக வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

1-வது வார்டில் ஜான்சி ஜெயமலர், நாலாவது வார்டு தர்மராஜா, 5வது வார்டில் நான்சி, 6வது வார்டில் ஹேமா, 7வது வார்டில் மகேஸ்வரி, 9வது வார்டில் காவேரி, 12 வது வார்டில் ராஜேஸ்வரி, 14 வது வார்டில் வல்லவன் ராஜா, 19வது வார்டில் நாகராஜன் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மூன்றாவது வார்டில் கனக ஜோதி, 13 வது வார்டில் முத்துக்குமார், 13 வது வார்டில் மரியசெல்வம், 17 வது வார்டில் ராதா குமாரி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 8வது வார்டில் புவனா அருமை, 16வது வார்டு சுரேஷ் லிகோரி ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2 வது வார்டில் முருகேசன் 15 வது வார்டில் உதயசூரியன், 18வது வார்டில் சரவணன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.

Tags

Next Story