தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவி திமுக கைப்பற்றியது

தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவி திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளது.

இதில் திமுக போட்டியிட்ட 9-வார்டு களில் 8 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி ஊராட்சி ஒன்றியம் திமுக வசமானது.

1-வது வார்டில் கலாநிதி, 3வது வார்டில் அழகுசுந்தரம், 4 வது வார்டில் ஷேக் அப்துல்லா, 5 வது வார்டில் செல்வநாயகம், 6வது வார்டில் வினோதினி, 7வது வார்டில் மல்லிகா, 8வது வார்டில் சுப்புலட்சுமி, 9வது வார்டில் கனகராஜ் முத்துப்பாண்டி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் இரண்டாவது வார்டில் பிரியா அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி