தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுக கூட்டம்

தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுக கூட்டம்
X

தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு.

தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன், தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாடுபடுவது என்றும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும், மக்களுக்காக பணியாற்றுவது என்றும், அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் S.R.S.ரமேஷ், பால்சாமி, சத்யகோகிலா, மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் சாதர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் சரவணன் முத்துசாமி, மாவட்ட மாணவரணி தலைவரும், கிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவருமான S.R.S.சுரேஷ், மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி தேவி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் செந்தூர்பாண்டி, கணக்கப்பிள்ளைவலசை கிராம காங்கிரஸ் தலைவர் ரமேஷ், முன்னாள் தென்காசி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாக்கியராஜ், தென்காசி வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஷ், செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜீவ் காந்தி, செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் பொருளாளர் பாலகிருஷ்ணன், தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது சுலைமான் ரபிக் நன்றியுரை கூறினார் நிர்வாகிகள் முத்துக்குமார், தீனா மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story