தென்காசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
X

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கிய போது எடுத்த படம்

தென்காசி அரசு மருத்துவமனையில் தாய்ப்பாலின் அவசியம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வார விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டப்பட்டது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்பட்டது

இவ்விழாவில் ஆகஸ்ட் 1 அன்று தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தாய்ப்பால் வார விழாவை துவக்கி வைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தினை மிக விமர்சையாக எடுத்து கூறினார்.

இரண்டாவது நாள் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தாய்ப்பால் பற்றிய வினாடி வினா நடத்தப்பட்டது .மூன்றாவது நாள் தாய்ப்பால் பற்றிய கருத்தரங்கு மருத்துவர்களால் நடத்தப்பட்டது அதி ல் மகப்பேறு மருத்துவர் தமிழருவி , குழந்தைகள் நல மருத்துவர் அன்னபேபி , சங்கரி , சங்கர் , மற்றும் மருத்துவர் ஞான சுதா ஆகியோர் கருத்தரங்கில் விரிவுரையாற்றினார்கள் .கருத்தரங்கில் தென்காசி மாவட்டத்தில் சுமார் நூறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

நான்காவது நாள் பிரசவ பகுதியிலுள்ள தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்டது .ஐந்தாவது நாள் செவிலியர் மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு , தாய்ப்பாலை மையமாக கொண்டு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது .

ஆறாவது நாள் ரோட்டரி சக்தி சங்க உறுப்பினர்கள் மூலம் மகப்பேறு பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கு ஊட்ட சத்து மாவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது . ஏழாவது நாளில் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் அவர்களின் தலைமையில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இதில் குழந்தைகள் நல பிரிவு தலைமை மருத்துவர் கீதா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், தாய்ப்பால் வார உறுதிமொழி எடுக்கப்பட்டது . இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கி தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும்,கட்டாயத்தை பற்றியும் விளக்கிக் கூறினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் முன்னிலை வகித்ததார். இதில் இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமத்தின், தென்காசி கிளையின் தலைவர் மருத்துவர் அஜீஸ் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி எடுத்துக்கூறி தாய்ப்பால் வார கொண்டாட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள், தாய்மார்கள், மற்றும் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் ,கடந்த ஒரு வாரமாக உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி ,வெற்றி பெற செய்த குழந்தைகள் நல தலைமை மருத்துவர் கீதா மற்றும் அனைத்து குழந்தைகள் நல மருத்துவர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

தென்காசி மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் செல்வபாலா, இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமத்தின் தென்காசி கிளையின் செயலாளர் மருத்துவர் உமா கதிரேசன், மூத்த மருத்துவர்கள் லதா, புனிதவதி, தமிழருவி, மணிமாலா, ராஜலட்சுமி, மது, மில்லர், பிரதீபா, மகேஷ், குழந்தைகள் நல மருத்துவர் ராஜேஷ், அன்னபேபி, சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுடபுணர்கள் , செவிலியர் மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பிரசவ பிரிவிலுள்ள தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகள் நல மருத்துவர் பாபு நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story