சுரண்டை அருகே தொழிலாளி தீக்குளிப்பு சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியவர் கைது
பைல் படம்.
ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசன் (39) இவர் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கால் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத காரணமாக இவரால் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியை கூட சரியாக கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இம் மாதம் 6ம் தேதி இவருக்கு கடன் கொடுத்த கருவந்தா தெற்கு தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், கணேசனின் வீட்டுக்கு சென்று தனக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சத்தை உடனடியாக திருப்பி தரும்படியும் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மறுநாள் காலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கணேசன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சமையலுக்கு இருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தீயின் வெப்பம் தாங்காமல் அலறித் துடித்த அவரது சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பூட்டியிருந்த கதவை உடைத்து, இவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கணேசனை தற்கொலைக்கு தூண்டியதாக கனகராஜ் மீது ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர்.
கனகராஜ் வேளாங்கண்ணியில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu