குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது
X
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தற்போது புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருகிறது. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!