தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

ராமநதி அணை கோப்பு படம்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் அணைகள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் தென்காசி முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பல குறிப்பிடத்தக்க அணைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

அடவிநயினார் அணை: குற்றாலம் மற்றும் அச்சன்கோவில் பகுதிக்கு அருகில் அடவிநயினார் அணை அமைந்துள்ளது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

கடனாநதி அணை & குண்டாறு அணை: இரண்டும் வனப்பகுதிகளால் சூழப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ளன. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை. குண்டாறு அணையில் இருந்து குற்றாலத்தின் அருவிகளுக்கு நீர்வரத்து இருக்கும்.

ராமநதி அணை: இயற்கையான சுற்றுச்சூழலைக் கொண்ட இந்த அணை மனதை கவரும் அழகிய இடமாக விளங்குகிறது. தென்காசி நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பாரம்பரியம் காக்கும், குற்றால சீசனில் நிரம்பி வழியும் தென்காசி அணைகள் விவசாயம் மற்றும் சுற்றுலா என பல வகைகளிலும் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 13-02-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 68.40 அடி

கொள்ளளவு: 168.15 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 114.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 72.75 அடி

கொள்ளளவு: 77.19 மி.க.அடி

நீர்வரத்து : 11.00 மி.க.அடி

வெளியேற்றம் : 40.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 60.53 அடி

கொள்ளளவு: 77.28 மி.க.அடி

நீர் வரத்து : 7.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 33.25 அடி

கொள்ளளவு: 14.55 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 99.50 அடி

கொள்ளளவு: 96.33 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

Updated On: 13 Feb 2024 3:52 AM GMT

Related News