மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை; குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை; குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு
X

நீர்வரத்து அதிகரிப்பால் ரம்மியமாக காட்சியளிக்கும் மெயின் அருவி.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, தென்காசி, கடையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வரத்து உள்ளது.

கொரோனா பரவல் தடைச் சட்டம் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பொதுமக்கள் குற்றாலத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். தடை விதிப்பதன் காரணமாக அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Tags

Next Story
why is ai important to the future