மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய கிராமத்து இளைஞர்கள்

50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது ஆவுடையானூர். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நல திட்டங்களையும், பணிகளையும், செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிராமத்தை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டனர்.
அதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு தமிழன் மக்கள் நலசங்க செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மு.வைகுண்ட மணி முன்னிலை வகித்தார். தமிழன் மக்கள் நலசங்க பொருளாளர் ஜெயராமசுந்தர் மற்றும் உறுப்பினர்கள் அரி ராமசந்திரன் ,திருமலைச்செல்வன், ரஞ்சித், சரவணன் தோழர்கள் ஆத்தியப்பன், முகிலன், ரத்தவேல், லாரன்ஸ், குமார், விஜய், மகாராஜா அனைவரும் கலந்து கொன்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu