தென்காசியில் 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசியில் 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கால்நடை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளான கால்நடை ஆய்வாளர் பயிற்சி போர்க் கால அடிப்படையில் துவங்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 6வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை சங்க கோரிக்கையின் வழியாக அமல்படுத்திட வேண்டும். தமிழகத்தில் பணியாற்றுகிற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு ஆட்சியில் வரும்போது தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும், விடுபட்ட அனைத்து கால்நடை மருத்துவம் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் களஞ்சியகுமாரி, கோட்டச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

மாவட்டச் செயலாளர் சுடலைமுத்து, கோட்டச் செயலாளர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை முழங்கினர். இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் துரைசிங், மாநில தணிக்கையாளர் சுப்பராஜ் கோட்ட செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 25 Sep 2023 3:22 PM GMT

Related News