பாட்டா குறிச்சியில் அமைந்துள்ள பிரம்மர் கோவிலில் வருஷாபிஷேகம்

பிரம்மருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கீழப்பாட்டாகுறிச்சி கிராமத்தில் பரம்மலோகம் பிரம்மா திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 2017-ம் ஆண்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12-ம் தேதி வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று இன்று பரம்மலோகம் பிரம்மா திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இன்று அதிகாலை 3 மணிக்கு பிரம்ம யாக பூஜை வேள்வியிடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஆலமரம், அரசமரம், கணபதி, வேல்முருகர், நவக்கிரகம், சபரி ஐய்யப்பன், ஆஞ்சநேயர் மகாவிஷ்ணு மஹா சிவன் மகா சரஸ்வதி மகாலட்சுமி மகாசக்தி பஞ்சமுக பிரம்மா சுவாமிகளுக்கு 11 வகையான வாசனை பொருட்கள் மூலமும், கும்பநீர் அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பஞ்சமுக பிரம்மாவிற்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த வருஷாபிஷேக விழாவில் கேரள பந்தள மன்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். வருஷாபிசேகத்தை முன்னிட்டு கோவிலில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரம்மலோகம் பிரம்மா திருக்கோவிலின் வருஷாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சரசந்திர போஸ் மற்றும் இசக்கி பாண்டியன், ஆன்மீக அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பரம்மலோகம் பிரம்மா திருக்கோவிலின் வருஷாபிசேக விழாவில் தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu