தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை
வருண கலச பூஜைக்கு மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது.
விவசாயம் செழிக்கவேண்டி தோரணமலையில் வருண கலச பூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் வழிபட்ட திருத்தலமாகும். உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடமும் இதுதான்.
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் அகஸ்தியரை சந்தித்து தனது தலைவலியை தீர்க்க கோரினார்.
அதனைத் தொடர்ந்து அகஸ்தியர் மற்றும் அவரது சீடரான தேரையர் அவரை பரிசோதித்து தலையில் தேரை இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முதல் முதலில் கபால அறுவை சிகிச்சை இங்கு நடைபெற்றதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. இவ்வாறு இந்த தலம் பழமையும் புராதனமும் வாய்ந்த கோவிலாகும்.
சித்தர்கள் முனிவர்கள் வழிபட்ட இக்கோவிலில் ஆவணி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மலை மீது உள்ள புனித சுனையில் இருந்து கலசங்களில் நீர் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu