பட்ஜெட்டில் பெயர் இல்லை என்று தமிழக அரசு கூறுவது குழந்தைத்தனமான பேச்சு -பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன்

பட விளக்கம்: பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் சுவாமி தரிசனம் செய்து யாணை கோமதியிடம் ஆசி பெற்று யானையிடம் நலம் விசாரித்தார்..
தொடர்செய்தியாளர்களையும் சந்தித்தார்....
மாநில முதல்வர் முக.ஸ்டாலின் அவருடைய துணைவியாரிடம் கேட்டு கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுமையாக எப்படி நிறைவுற்றிருக்க வேண்டும் என கேட்டு பக்தர்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற வேண்டும், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என தமிழகஅரசு கூறுவது ஒரு குழந்தைதனமான பேச்சு என சங்கரன்கோவிலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய மகளிர் அணி தலைவியுமான வானதிஸ்ரீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக பாஜக தொண்டர்கள், பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
தொடர்ந்து சங்கரநாரயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்பாள் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து யானை கோமதியிடம் ஆசி பெற்று யானை கோமதியிடம் சாப்பிட்டய, நல்ல இருக்கையா, என கேட்ட வானதிஸ்ரீனிவாசனுக்கு யானை தலையை ஆட்டி பதில் கூறியது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்...
சங்கரன்கோவில் சங்கரநாரயணர் சுவாமி திருக்கோவிலில் பணிகளை முடிக்காமல் கும்பாபிஷேகம் தேதியை குறித்துள்ளனர். என பக்தர்கள் குற்றசாட்டை தொடர்ந்து முன் வைத்துள்ளனர். பழங்கால ஓவியங்கள், கோவில் பணிகள் அறைகுறையாக முடியாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றசாட்டுகின்றனர். எனவே மாநில முதல்வர் முக.ஸ்டாலின் மாநில முதல்வர் அவருடைய துணைவியாரிடம் கேட்டு கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுமையாக எப்படி நிறைவுற்றிருக்க வேண்டும் என கேட்டு பக்தர்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற வேண்டும்..
மத்திய பட்ஜெட்டை எதிர்த்து தொடர்ச்சியாக தமிழகஅரசு குற்றசாட்டு கூறி வருகிறது. ஒரு மாநிலத்தின் பெயர் சொல்லவில்லை என்றால் அந்த மாநிலத்திற்கு நிதி செல்லாத எனவும் இது ஒரு குழந்தை தனமான பேச்சு ஒரு அரசாங்கம் நடத்தக்கூடியவர் ஒரு இடத்தின் பெயரையும், மாநிலத்தின் பெயரையும் சொல்லவில்லை என்றால் திட்டம் செயல்படுத்த முடியாமல் போகிவிடுமா..
திராவிட மாடல் அரசு ஏதாவது ஒரு நபர் குற்றம் செய்தால் அவரை பிடித்து என்கவுண்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி அரசு என சொல்வாங்க அதை திமுக செய்து கொண்டிருக்கிறது என சங்கரன்கோவிலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் செய்தியாளர்க்கு பேட்டிஅளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu