85 பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கிய தன்னார்வலர்கள்..!

85 பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கிய தன்னார்வலர்கள்..!
X

 மாணவிக்கு சீருடை வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன்

நடுத்தர மக்களுக்கு பல்வேறு உதவிகள் பல அமைப்புகளிடமிருந்து இருந்து செய்யப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.

கடங்கநேரியில் பிரெண்ட்ஸ் கிளப் சார்பில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு பிரெண்ட்ஸ் கிளப் தலைவர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கினார் செயலாளர் பாலகிருஷ்ணன் பொருளாளர் மதி என்ற மாடசாமி முருகன் செல்வம் கலை மணி பிரேம் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் வரவேற்று பேசினார்.முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் கலந்து கொண்டு 85 மாணவ மாணவியருக்கு சீருடை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க செல்வம் மாவட்ட பொறுப்புக்குழு முன்னாள் உறுப்பினர்மேகநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலை குமார் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தட்டப்பாறை கணபதி மாவட்ட பிரதிநிதிகள் ஸ்டீபன் சத்யராஜ் அன்பழகன் கிளைக் கழகச் செயலாளர் இசக்கித்துரை ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி ஆசிரியர் துரைச்சாமி ஆசிரியை பூமணி ஆசிரியர் மதன் போஸ்டல் முருகன் இளைஞரணி அரவிந்த் திலக் மாணவர் அணி தினேஷ் பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமார் லட்சுமண பாண்டியன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் சோனா மகேஷ் சிவனேசன் நாகல்குளம் காசி பாண்டியன் அருணா பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் முடிவில் தலைமை ஆசிரியர் பேபி அவர்கள் நன்றி கூறினார்கள்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு