உதயநிதி பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

உதயநிதி பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!
X

பட விளக்கம் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய போது எடுத்த படம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது

தென்காசி நகர திமுக. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி தலைவரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதே போன்று தென்காசி மாவட்டம் தென்காசி நகர திமுக சார்பில் காசிவிஸ்வநாத சுவாமி கோவில் சன்னதி முன்பு நகர செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான சாதீர் தலைமையில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நகர்மன்றத் தலைவர் சாதீர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!