‘இந்தியா கூட்டணி உடைவதற்கு உதயநிதி தான் காரணம்’ - சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியா கூட்டணி உடைவதற்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு தொகுதி பங்கீடு இல்லை என அறிவித்ததற்கும் காரணம் உதயநிதியின் சனாதன பேச்சே காரணம் என மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வருகை தந்தார்.
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் புதிய இளம் வாக்காளர்களுடன் சேர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தென்காசியில் வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றேன் அங்குள்ள கோவிலை சுற்றி பார்த்தபோது எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது காரணம் கோவிலுக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தையும் அரசு எடுத்துக் கொள்வதால் கோவிலை பராமரிக்காமல் போட்டு உள்ளார்கள் இதனால் அரசின் அறநிலைய துறை ஆலயத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
வர இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தவரை 25 இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியா கூட்டணி என்பது உடைகின்ற கூட்டணியாக உள்ளது. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் தொகுதிப்பங்கீடு இல்லை என்று அறிவித்துள்ளார். இது சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தின் விளைவாக உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் அரசு ஊழல் அரசாக செயல்பட்டு வருகிறது. ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு ஊழல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு அமைச்சர் ஜெயிலிலும், மற்றொரு அமைச்சர் பெயில் வாங்கவும் அலைந்து கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu