தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேர் கைது

தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட இருவருடன் போலீசார்.

தென்காசி அருகே போலி பீடி தயார் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழப்புலியூரில், தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, தலைமை காவலர் அருள்ராஜ், முதல் நிலை காவலர்கள் சிவப்பிரகாஷ், கார்த்திக் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலியாக கணேஷ் பீடி என்று லேபிள் ஒட்டி தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த. ரூ.1,16,000/- மதிப்புள்ள போலி கணேஷ் பீடிகள் எதிரிகள் சிவராமன் மற்றும் சங்கரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு