தென்காசி மருத்துவமனையில் பயிற்சி சேர்க்கை: வெளிநாட்டில் பயின்ற மாணவர்களுக்கு அழைப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெளிநாடு சென்று மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான மருத்துவ பயிற்சி சேர்க்கை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மருத்துவ மாணவர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் 1500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 500-க்கும் அதிகமான உள்நோயாளிகள் படுக்கை வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள்:
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பகுதி, தீவிர சிகிச்சைப் பகுதி, இதய சிகிச்சைப் பகுதி, சிறப்பு சிசு சிகிச்சைப் பகுதி, குழந்தைகள் புத்துயிர் மற்றும் அவசரகால சிகிச்சைப் பகுதி, மகப்பேறு மற்றும் மகளிர் நோய் பகுதி, பொது அறுவை சிகிச்சைப் பகுதி, சிறுநீரக அறுவை சிகிச்சைப் பகுதி, பொது மருத்துவ சிகிச்சைப் பகுதி, எலும்பு முறிவு மற்றும் மூட்டு சிகிச்சைப் பகுதி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பகுதி, கண் சிகிச்சைப் பகுதி, தோல் நோய் சிகிச்சைப் பகுதி, பால்வினை நோய் சிகிச்சைப் பகுதி, மனநல சிகிச்சைப் பகுதி, மயக்கவியல் சிகிச்சைப் பகுதி, குழந்தைகள் நல சிகிச்சைப் பகுதி, வளர் இளம் பருவ நோய் காண் பகுதி, முதியோர் சிகிச்சைப் பகுதி, தொற்றா நோய் சிகிச்சைப் பகுதி, கதிர் இயக்க நோய் காண் பகுதி, பல் நோய் சிகிச்சைப் பகுதி, வலி நீக்கு மருத்துவப் பகுதி, மாவட்ட காச நோய் சிகிச்சை மையம், எய்ட்ஸ் நோய் சிகிச்சைப் பகுதி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட சிகிச்சைப் பகுதி, இயன்முறை மருத்துவ சிகிச்சைப் பகுதி, இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப் பகுதி, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் , நம்பிக்கை மையம் , தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பகுதி , இரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி, மத்திய ஆய்வகம், உயிர் மூலக்கூறு ஆய்வகம், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கண்டறியும் ஆய்வகம், நோய்க்கூறு இயல் ஆய்வகம், சித்தா பகுதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் என அனைத்து சிகிச்சை வசதிகளையும் கொண்டுள்ளது.
எனவே வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி எடுத்து பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu