tourists permitted to courtallam falls குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

tourists permitted to courtallam falls  குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

குற்றால அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

tourists permitted to courtallam falls ஐந்தருவி, பழைய குற்றாலம், மற்றும் புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து சற்று குறைந்தது தொடர்ந்து அங்கும் இருப்பதற்கு பிற்பகலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

tourists permitted to courtallam falls


குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்கின்றனர் (கோப்பு படம்)

tourists permitted to courtallam falls

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி , ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரண்டாவது நாளாக இந்த தடை இன்றும் நீடிக்கிறது.குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முறையாக தொடங்கவில்லை எனினும் கடந்த இரு நாட்களாக மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை ஐந்தருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது .இதைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியிலும் பிற்பகலில் மெயின் அருவியிலும் தண்ணீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

tourists permitted to courtallam falls


சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வரிசையில் நின்றுள்ளனர் (கோப்புபடம்)

tourists permitted to courtallam falls

இந்நிலையில் இன்று முற்பகலில் ஐந்தருவி, பழைய குற்றாலம், மற்றும் புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து சற்று குறைந்தது தொடர்ந்து அங்கும் இருப்பதற்கு பிற்பகலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மெல்லிய சாரல் மலை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பாதாதைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.பல இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் வந்ததால் மின்தடை ஏற்பட்டது அதை இரவு பகல் பாராது விடிய விடிய மின்வாரிய ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து மக்களின் பாராட்டைப் பெற்றனர்.

Tags

Next Story