குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் பிரதான அருவி.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஒன்று குற்றாலம். இன்று ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்தப் பருவநிலையில் மெல்லிய சாரலுடன் காற்றுடன் சேர்ந்து சாரல் மழை பெய்யும். இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பருவநிலை காலங்களில் அறிவியலில் போதிய தண்ணீர் இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மாலை நேரங்களில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது, ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆனது ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், தண்ணீரானது இலை, தளைகளுடன் சேர்ந்து அதிவேகமாக கொட்டி வருவதன் காரணமாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீரானது குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu