குற்றாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூவர் இருசக்கர வாகனங்களுடன் கைது
குற்றாலம் பகுதியில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்
குற்றாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று பேருக்கு அபராதம் விதித்து அவர்களது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும், அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகன் செய்யது சுலைமான் தாதா பீர் (22), தென்காசி ஜம்ஜம் நகர் சையது சுலைமான் என்பவரின் மகன் முகமது தெளபிக் (21), தென்காசி மாதா கோவில் ஒன்றாம் தெரு புவனேச பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (21) ஆகியோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவது, போன்ற வீடியோக்கள் பதிவு செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பிற மத மற்றும் சமூக அமைப்புகளை குறித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்திருப்பின் அவர்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu