தபால் ஓட்டு பதிவை சமூக வலைத்தளததில் பதிவிட்ட 3 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் நேற்று தபால் ஓட்டு போட்டு அந்த ஓட்டு சீட்டை புகைப்படம் எடுத்து அதனை முக நூல் மற்றும் வாட்ஸ் அப்பில் பரப்பியதாக சகாய மேரி என்ற ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று அவர் மீது மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அந்த சம்பந்தபட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு பணி இடைநீக்கம் பரிந்துரைக்கடிதம் அனுப்பபட்டது.
இந்த நிலையில் சகாய மரியாள் ஆசிரியை அந்த தபால் ஓட்டை தான் பெறவில்லை எனவும் அது குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தின் மூலம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரனை செய்ததில் முக நூல் கணக்கில் பதிவிட்ட செந்தில் பாண்டியன் என்பவரிடம் நடத்திய விசாரணை மூலம் அந்த வாக்கு சீட்டு கணேச பாண்டியன் என்பவர் மனைவி ஆசிரியை கிருஷ்ண வேணிக்கு உரியது என்பது தெரிந்தது. தான் வாக்களித்த தபால் வாக்கு சீட்டை தன் மகனுக்கு காட்டுவதற்காக புகைப்படம் எடுத்து காண்பித்ததாகவும், அதனை அவர் கணவர் குழுவில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மற்றொரு நபர் முக நூலில் பகிர்ந்துள்ளார் இந்த நிலையில் கிருஷ்ணவேணி, கணேசபாண்டியன்,செந்தில் பாண்டியன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 178ந் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது மேலும் முக நூல் வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் மீது மிஜி ஆக்ட் படி வழக்கு பதியப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu