தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
X

சங்கீதா சின்ன ராணி

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலராக சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றார்.

தென்காசி புதிய மாவட்ட கல்வி அலுவலராக, ரா.சங்கீதா சின்ன ராணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற, மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, 16.07.2021 முதல், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக, ஆறு மாதம் பயிற்சி பெற்றார்.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பின்பு இன்று, முற்பகல் முதல், தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக, சங்கீதா சின்னராணி பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பில் இருந்த திருச்செந்தூர் பாண்டியன், பொறுப்புகளை ஒப்படைத்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!