வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Today Protest News -வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வலியுறுத்தி  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Today Protest News -தென்காசி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தென்காசியில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.டபிள்யு. எப்.ஐ.மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5000 ரூபாய் வழங்க வேண்டும். முந்தைய அரசு வழங்கியது போல் பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை வழங்க வேண்டும், பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகத்திற்கு தேவையான அலுவலக தளவாடங்களை வழங்கி, தேவையான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதன. இந்த ஆர்ப்பாட்டத்தில் குருசாமி. மாரிராஜன், முருகையா,வன்னிய பெருமாள். சி.ஐ.டி.யு.ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர், தர்மராஜ், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன். மாவட்ட துணை தலைவர் குருசாமி. பீடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர். மாக விஷ்னு, மாவட்ட செயலாளர், அய்யப்பன் சி.ஐ.டி.யு. தென்காசி வட்டார செயலாளர் லெனின்குமார் சி.ஐ.டி.யு.கட்டுமான சங்கமாவட்ட செயலாளர் முருகையா. சி.டபிள்யு. எப்.ஐ. நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டுமான தொழிலாளார்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். கட்டுமான பொருட்களுக்கு அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நிறுத்தப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.அதனால் கட்டுமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தினார்கள். தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உரிய ஆவணங்களை தொழிலாளர்களால் தாக்க செய்து வீடு கட்டும் திட்டத்தில் உள்ள முழு பயனை அடைய முடியவில்லை. அதனால் இந்த திட்டத்தின் விதிகளை எளிமை படுத்தி தொழிலாளர்கள் எளிதாக வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் சங்க கொடிகளுடன் கலந்து கொண்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  2. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  3. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  4. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  5. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  6. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  7. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  8. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  9. நாமக்கல்
    புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
  10. நாமக்கல்
    மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி