தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
X

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தபால் அலுவலகம் மூலம் பொதுமக்கள் பணம் அனுப்பிய போது எடுத்த படம்.

தென்காசி நகராட்சி 10 வது வார்டு பொதுமக்கள் 36 பேர் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பினர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

அப்போது தென்காசி நகராட்சி 10 வது வார்டு பகுதி பெண்கள் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை பரிசீலனை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10வது வார்டு மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

மகளிர் உரிமைத் தொகை பணம் கிடைத்த 10வது வார்டு பொதுமக்கள் 36 பேர் நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா தலைமையில் தென்காசி தலைமை தபால் நிலையத்திற்கு சென்று அங்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ரூ.200, ரூ.300 என மொத்தம் ரூ.20 ஆயிரத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், திமுக நகர பொருளாளர் பரிஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future education