புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
X

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பல்வேறு காரணங்களால் ரூ.110 மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகிறது. மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகள் , தேவையான அரசு அலுவலகங்கள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 110 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் பல்வேறு நிர்வாக காரணங்களால் இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மேலும் இந்தக் கட்டிடம் சரிவர பராமரிக்காமல் மேற்கூரைகள் உடைந்து விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அந்த கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட நூலகத்தை வாய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போட்டாச்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!