தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத் தலைவரிடம், மனு அளித்த பாஜகவினர்
தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவரிடம், பாஜக சார்பில் ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் மனு அளித்தார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குற்றாலத்திற்கு வருகை தந்த தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசனிடம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர் பாண்டியன் நேரில், மனு அளித்தார்.
அதில் மத்திய அரசு அனைத்து பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை இந்தியா பரப்புரையாளர்களின் பணியை முடக்கும் விதமாக அவர்களை அனைத்து பகுதிகளுக்கும் செல்ல விடாமல் அலுவலகத்தில் வைத்து மாற்று பணி வழங்கி திட்டத்தை முடக்கும் செயலில் ஈடுபடும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் மீதும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் இல்லங்களுக்கு தூய்மை பணியாளர்களை பணியில் அமர்த்தும் சில உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் தென்காசி நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அதாவது தென்காசி நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்காமல் உள்ளதால் ஏற்கனவே பணியில் உள்ள குறைந்த பணியாளர்களுக்கு பணி சுமை அதிகரிக்கிறது. இதை கலைய புதிதாக தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பண பலன் ஓய்வூதியங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் வழங்க வேண்டியும் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது மாவட்ட பாரதிய ஜனதாகட்சித் தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் லட்சுமண பெருமாள், பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் குத்தாலிங்கம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் நகர தலைவர் சந்திரமூர்த்தி, குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் அசோக் பாண்டியன் தெற்கு ஒன்றிய வர்த்தக அணி தலைவர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu