குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தென்காசி நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தென்காசி  நகராட்சி அலுவலகம் முற்றுகை
X

 தென்காசி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

குடிநீர் கேட்டு தென்காசி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குடிநீர் கேட்டு தென்காசி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

தென்காசி 13வது வார்டு மேல வாலிபன் பொத்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் கோரிக்கை மனுவினை நகராட்சி ஆணையாளரிடம் அளித்தனர்.

அந்த மனுவில்கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதி உயரமான பகுதி ஆகும். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஆனாலும் தாமிரபரணி குடிநீர் கிடைப்பது இல்லை உயரமான பகுதியாக இருப்பதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துடன் தாழ்வான பகுதிகளுக்குச் சென்று பைக், சைக்கிள் ஆகியவற்றின் மூலம் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. எனவே புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.

எங்கள் பகுதியில் புதிய குடிநீர் தொட்டி கட்டினால் எங்கள் பகுதி மட்டுமின்றி தைக்கா தெரு, காவலர் குடியிருப்பு, கூளக்கடை பஜார், எல்லார் சாமி நாயுடு பாளையம், அரிப்பு கார தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தடையின்றி தாமிரபரணி குடிநீர் கிடைக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?