தென்காசி மேல முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தென்காசி மேல முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X

கும்பாபிஷேக விழாவில் கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தென்காசி மேல முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தென்காசி மேல முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற மஹாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு மேல முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 6 - ஆம் தேதி முதல் தொடங்கி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மஹா கணபதி ஹோமம், வருண கும்ப பூஜை போன்ற பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவான இன்று இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9 .20 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாரானை நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.என்.எல்.எஸ்.சுப்பையா, முத்தாரம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோமதிநாயகம், செயல் அலுவலர் முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சீதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story