தென்காசி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் கோரிக்கை

தென்காசி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் கோரிக்கை

பட விளக்கம்: காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்

தென்காசி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் கோரியுள்ளார்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம், காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் எஸ்சி.எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் பேட்டியளித்தார்..

பாஜக அரசில் ஏழைகளுக்கு ஆதரவான திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் தலித்கள், ஓபிசிகள் (பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள்) மற்றும் பழங்குடியினர்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி., எஸ்டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில்,

மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், மத்திய அரசு வங்கிகளில் இட ஒதுக்கீடுகளை சரியாக கையாளாமல் போற போக்கில் மோடி பொய்யை கூறி வருகிறார். காங்கிரஸ் கட்டியமைத்த இந்தியாவை குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போன்று மோடி சீர்குலைத்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி தனி தொகுதி என்பதாலும் கடந்த ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற வந்த நிலையில் காங்கிரசுக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும் திமுகவிடம் காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Next Story