ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களோடு செல்பி எடுத்துக்கொண்ட கொண்ட மாவட்ட ஆட்சியர்..!
ஆசிரியை ஆசிரியர்களோடு செல்பி எடுத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்
தென்காசி அருகே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி ஆசிரியர்களை கவுரப்படுத்தி செல்பி எடுத்த மாவட்ட ஆட்சியர், மாணவ மாணவிகளிடம் கேள்வி கேட்டு தன் பேனாவை பரிசாக வழங்கினார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளை சரி செய்து அவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு நல்ல மனிதனாக மாற்றும் அரும்பணியை பாராட்டும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடர்ந்து 100 சதவிகித தேர்ச்சி கொடுத்து வரும் அனைத்து ஆசிரியர்களையும் கெளரவப்படுத்தும் விதமாக அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அனைத்து ஆசிரியகளும் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுடன் தன்படம் எடுத்து கொண்டார்.
பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பள்ளி குழந்தைகளிடம் முதல் குடியரசு தலைவர், தற்போதைய குடியரசு தலைவர் யார் என்ற கேள்வி கேட்டு சரியான பதில் அளித்த மாணவிக்கு தனது பேனாவை பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறி, மாணவ மாணவிகளுடன் குழுப்படம் எடுத்து கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu