/* */

மேகதாது அணை கட்டினால் தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும்: பீட்டர் அல்போன்ஸ்

மேகதாது அணை கட்டினால் தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மேகதாது அணை கட்டினால் தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும்: பீட்டர் அல்போன்ஸ்
X

செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோ பங்கேற்ற நிலையில், ரூபாய் 13.54 லட்சம் மதிப்பில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது : -

செங்கோல் என்பது முடியாட்சி தத்துவத்திலான அமைப்பு எனவும், மன்னர் வழிவந்து அரசு ஆள்பவர்களே செங்கோலை பயன்படுத்தினர். ஆனால் குடியாட்சி மூலம் ஆட்சி நடத்தியவர்கள் யாரும் செங்கோலை பயன்படுத்தியது இல்லை. செங்கோல் என்பது வெறும் விளம்பரத்திற்காக பாஜக அரசு ஏற்படுத்திய ஒரு மாயை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா காங்கிரஸ் அரசு அணை கட்ட முயற்சி செய்தால் அதை தமிழக காங்கிரஸ் கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் எனவும், மேகதாது பகுதியில் அணைக்கட்ட தமிழக அரசு அனுமதி மற்றும் ஒன்றிய அரசு அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் எந்த ஒரு செயலையும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய அரசு எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதற்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2023 8:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு