டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா..!

டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா..!
X

கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்ற போது எடுத்த படம்

தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடந்தது.

விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஷீலா நவரோஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவ ஆசிரியர் ஜெசுலின் அமிர்தா வேத பகுதி வாசித்தார் தமிழ்த்துறை பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வரவேற்று பேசினார்

மாணவ ஆசிரியர்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தன தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.

இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், பேரூர் திமுக செயலாளர் முத்தையா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், பொறியாளர் பிரசாத், கந்தையா, டாக்டர் ஜெயசந்திரன், சாலமோன், பொன்ராஜ்

பேராசிரியர்கள் ஷீலா, ஜெனிபர், முத்துலட்சுமி, ஹெப்சி, நூலகர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் மாணவ ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மாணவ ஆசிரியர்கள் ருகையா ருகி, ஆயிஷா நமீரா தொகுத்து வழங்கினர், ஹெப்சி நன்றி கூறினார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!