வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி சந்தேக நபர்கள் !

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி சந்தேக நபர்கள் !
X

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி மர்ம நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கண்காணிக்க அனுமதி வேண்டுமென திமுக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையில் உள்ள சிசிடிவி கேமரா 4 நிமிடங்கள் வேலை செய்யவில்லை. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே கண்டெய்னர் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாரிடம் திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே வாக்கு எண்ணும் மைய கட்டிடத்தை சுற்றிலும் கட்சி முகவர்கள் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் தலைமையில மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் செய்தியாளர்களிடம் பேசும்போது :

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவில் ஏற்பட்ட கோளாறுகள் போன்ற தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கும், வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு வெளிப்புறத்திலும் கட்சி முகவர்கள் சந்தேகப்படும்படியான நபர்களை கண்டறிய கட்சி முகவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், கட்சி முகவர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளிக்க வாய்ப்பில்லை.

ஆனால் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை கூடுதலாக கண்காணிக்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் சிவபத்மநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா, தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பழனி நாடார், தென்காசி நகர செயலாளர் சாதிர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!