சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து
X

சுரண்டையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏற்ப்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்.

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இரவு சுமார் 9 மணி அளவில் அபாய ஒலி ஒலித்தது. அப்போது அருகில் உள்ள கடைக்காரர்கள் பார்த்தபோது வங்கியினுள் தீ எரிவது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு துறையினரும் மற்றும் சுரண்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்புத்துறையினர் வங்கி உள்ளே சென்று பார்த்த போது மேலாளர் அறை அருகே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!