ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூ கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
தென்காசி மாவட்டத்தில் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் 1.9.2021 முதல் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 79 அரசு பள்ளிகள், 72 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 86 சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகள், 10 சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 247 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
அரசுப் பள்ளியில் 31,692 மாணவ மாணவியர்களும், அரசு உதவி பெறும் பள்ளியில் 30,788 மாணவ மாணவிகளும், சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிக் பள்ளியில் 14,435 மாணவ மாணவிகளும், சுயநிதி பள்ளியில் 994 மாணவ மாணவிகளும் மொத்தம் 77,909 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தர உள்ளனர். இன்று பாதுகாப்பாக பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் வருகைதர துவங்கியுள்ளனர்
மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய முக கவசம் அணிந்து வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும். மாணவ மாணவிகள் தங்களின் கைகளில் சுத்தமாக பராமரிக்க ஏதுவாக கிருமி நாசினி வைத்துக் கொள்ள வேண்டும் சோப்பு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அமைத்துக் கொடுக்க அறிவுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் வர துவங்கியுள்ளனர் வரக்கூடிய மாணவர்களுக்கு பள்ளிவாசலில் வைத்து உடல் வெப்ப பரிசோதனை கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
அதிக நாட்களுக்கு பின்பு மாணவர்கள் இன்று புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிகளுக்கு வருகை தரத் தொடங்கியுள்ளன. ஆர்வத்துடன் வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பூ வழங்கி வரவேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu