மாணவிகள் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்

மாணவிகள் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்
X

மருத்துவமனையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

வாசனை திரவியத்தை சுவாசித்து மயக்கமடைந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவர் அக்தர் என்ற சென்ட் டை நேற்று பள்ளி வகுப்பறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த அக்தர் சென்ட் பாட்டிலானது வகுப்பறைக்குள் விழுந்து உடைந்த நிலையில், வகுப்பறையில் செண்ட் நறுமணமானது முழுவதுமாக பரவியுள்ளது. இந்த நிலையில், அந்த நறுமணமானது மிக அதிக அளவில் இருந்த நிலையில், ஒவ்வொரு மாணவிகளாக திடீரென மயக்கம் அடைந்துள்ளனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் இதுதொடர்பாக பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே, உடனடியாக மயக்கம் அடைந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வந்த நிலையில், மாணவிகள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 மாணவிகள் மேல் சிகிச்சை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வி,துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,நகர் மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். இன் நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story