கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதற்கு எதிராக மறியல் போராட்டம்

கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதற்கு எதிராக மறியல் போராட்டம்
X

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால் திட்டமிட்டபடி மறியல் நடைபெறும்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு மணல், ஜல்லி, குண்டுகற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனிம வளங்கள் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக கூறி சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வருகின்ற 16-ம் தேதி சாலை மறியல் போரட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கோட்டாச்சியர் கங்காதேவி தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் போராட்டகாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை கோட்ட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கேரளாவிற்கு முறைகேடாக அதிக அளவு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வேண்டும், கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் கிராமபுற சாலை வழியாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து, சாலை சேதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.

இதனை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் முறையான எவ்வித பதில்களும் வராத காரணத்தினால் திட்டமிட்டபடி புளியரை பகுதியில் திரளானவர்களை கூட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சமூக அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself