தென்காசி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
தென்காசியில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் துவங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி 15 முதல் 18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறார்கள் பெற்றோர் அனுமதியுடன் பயிலும் பள்ளியிலேயே தடுப்பூசி போட வகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய மாணவர்கள் தங்கள் ஆதார் அடையாள அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் 42 பள்ளிகளில் 65, 980 தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது இன்று மட்டும் 16,972 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது இப்பணியில் ஈடுபடுவதற்காக 10 வட்டாரங்களிலும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று முதல் நான்கு குழுக்கள் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு முகாமில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஊராட்சி தலைவர் மிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன், உதவி தலைமையாசிரியர் தமாஸ்தனராஜ், மாவட்ட உதவி திட்ட மேலாளர் மரு. கீர்த்தி, மாவட்ட தொற்று நோய் நிபுணர் மரு. செ.தயாளன், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu