தென்காசியில் புதுப்பிக்காமல் இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.40 லட்சம் அபராதம்

தென்காசியில் புதுப்பிக்காமல் இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.40 லட்சம் அபராதம்
X
பறிமுதல் செய்யப்பட்ட பள்ளிப் பேருந்துகள்.
தென்காசியில் சான்றுகளை புதுப்பிக்காமல் இயங்கிய பள்ளி வாகனம் உள்ளிட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ் நாடு போக்குவரத்து ஆணையரின் உத்திரவுபடி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆலோசனையின்படி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், செங்கோட்டையில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார்.

மத்திய அரசு COVID 19 காரணமாக வாகனங்களுக்கு அனுமதி சீட்டு (permit) , தகுதி சான்று (FC), சாலை வரி (Road Tax) அபராதம் இல்லாமல் கட்டுவதற்கு 30.09.2021 வரை கால நீட்டிப்பு செய்திருந்தது.

தற்போது வாகனங்கள் அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்துதான் சாலைகளில் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கபட்ட பின்னரும் அதிக வாகனங்கள் எந்த சான்றும் புதுப்பிக்காமல் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து சிறப்பு வாகன நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் ஐந்து வாகனங்களும், ஒரு மினிபஸ். மூன்று சரக்கு வாகனங்கள், உள்ளிட்ட 9 வாகனங்கள் தகுதி சான்று மற்றும் அனுமதி சீட்டு இன்று சாலையில் இயக்கியதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story